Monday, June 27, 2011

ஹலோ பிரெண்ட்ஸ் ...
எங்களது நண்பன் "சுரேஷ்"- ஐ பற்றிய ஒரு சிறு கதை
சுரேஷ் குமார் - திரு.குமார், திருமதி .மல்லிகா அவர்களின் 3'வது புதல்வன், ஜூன் 8 1983 கோவில்கள் அதிகம் உள்ள கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தான். அம்மா 'க்கு செல்ல பிள்ளை. பாசத்தையும், அன்பையும், காட்டுவதில் எங்களது அம்மா 'க்கு நிகர் அம்மாதான். செல்லமாய் கண்டிப்பார்கள், திட்டுவார்கள், நல்ல அறிவுரை சொல்வார்கள், சுரேஷ் 'க்கு மட்டுமா இல்லை எங்களுக்கும்தான் ஏனென்றால் நாங்களும் அவர்களுக்கு பிள்ளைகள்தான் ... இதை
யாராலும் மறுக்க முடியாது ... அவர்கள் வயதில் நாங்கள் இவ்ளோ சுறு சுறுப்பாக இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான் ... உபசரிப்பதில் எங்களது அம்மா 'க்கு ஒரு தனி இடம் உண்டு ... சமைப்பதிலும் அம்மா- வின் கை வண்ணம் ஒரு தனி சிறப்புதான் ... அவர்கள் வைக்கும் மீன் குழம்புக்கு நான் அடிமை .... அடுத்து இரண்டு அண்ணன்கள் பாஸ்கர் அண்ணா, செந்தில் அண்ணா, விஜயகரன் அண்ணா ... இவர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் நல்ல நண்பர்கள் போல பழகுவார்கள் ... நாங்கள் கொடுத்து வச்சுருகனும் ...பாஸ் அண்ணா அமைதியான டைப் ரொம்ப பேசமாட்டங்க ஆனால் குட் பெர்சன் அவர்கள் வீட்டுக்கு முதல் தடவை போயிருக்கும் பொது ஏன் தலையில் எண்ணெய் ஊற்றி தேய்த்தும் விட்டார்கள் என்னால் மறக்க முடியாது ... செந்தில் அண்ணா செம ஜாலி டைப் ...பிஸி பெர்சன் ... அட்வான்ஸ் மைன்ட் செட் ... எனக்கு தெரிஞ்சு இவரும் ஒரு பில்கேட்ஸ் தான்... விஜயகரன் அண்ணா ஐயோ என்ன சொல்றது இவர் இருந்தா அந்த இடத்துல சிரிப்பு-க்கு பஞ்சம் இருக்காது , ரொம்ப சிம்பிள் பெர்சன், விஜயகரன் அண்ணா-னா ஒரு மாஸ் ... அதே போலதான் அண்ணிகளும் ... லாவண்யா அண்ணி ,ரதி அண்ணி ... உரிமையோடு பழகுவார்கள் , அன்போடு பேசுவார்கள் ... இந்த இடத்தில நான் ஒன்னு சொல்லியே ஆக வேண்டும் ரதி அண்ணி - ஐ நான் முதலில் பார்க்கும் பொது அவர்கள் எனக்கு முதலில் கொடுத்த வேலை வெங்காயம் ஊரிக்ரதுதன் ... மூன்று அண்ணிகளும் சிம்ப்லி அண்ட் கிரேட் ... இன்னும் ஒரு முக்கியமானவங்க இருகாங்க குட்டி தேவதை "வீயோமிதா " பால் கலரு , அழகு முகம் ,மழலை பேச்சு ... செந்தில் அண்ணா பொண்ணு . இப்போது எங்களது நண்பன் சுரேஷ் -ஐ பத்தி ....
சுரேஷ் யார் இவன் ... கும்பகோணத்தில் பள்ளி படிப்பை முடித்து ... கல்லூரி படிப்புக்காக திருச்சி வந்தான் ... எல்லோருட வாழ்கைளும் கல்லூரி நட்பு என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கும் அதே மாதிரிதான் எங்களது நட்பும் ... பத்து வருடமாக தொடர்கிறது ... இந்த காலத்துல இதுவே ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம்-நு நினைக்றவங்களுக்கு இன்னொரு சின்ன விஷயம் ... சுரேஷ்-கு சிறு வயதில் இருந்து இப்போ வரைக்கும் தொடர்கிற நட்பும் உண்டு ... கார்த்திக் , சதீஷ் , பிரேம் ... இவர்களது நட்பு இருபது வருடங்கள் இருக்கும் ... என்ன கரணம் புரிந்துகொள்தல் , விட்டு கொடுத்தல் இதுவே இந்த நட்பு தொடர்வதற்கு முக்கிய காரணம் ... சுரேஷ் மூலமா இந்த மூவரும் எனக்கு அறிமுகமானவர்கல் ... கார்த்திக் ரொம்ப ஜாலியான டைப் ... ப்ராக்டிகலா யோசிப்பன் ... கரெக்டா பிளான் பண்ணுவான் அதோடு விடாமல் அதை செய்தும் முடிப்பான் ... அவன் சொன்னத பாலோவ் பண்ணினால் நமக்கு கண்டிப்பா நல்லது நடக்கும் ... ஆனால்
அதை அவன் பாலோவ் பண்றனா-நு நாம பார்க்க கூடாது ... சதீஷ் சின்சியர் பையன் ... ஜாலி டைப் ... காதல் கல்யாணம் பண்ணிட்டு அமைதியாக வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கும் நல்ல நண்பன் ... பிரேம் இவருடன் எனக்கு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்க வில்லை ... பழகிய வரைக்கும் அமைதியான டைப் ... கண்ணன் ரொம்ப நல்ல பையன் ... கஷ்ட படனும் ... முன்னேறனும் ... குடும்பத்த நல்லா நிலைமைக்கு கொண்டு வரணும்னு நினைக்கும் ஒரு நல்ல நண்பன் ... எங்க எல்லோருக்கும் ஒரு தம்பி இருக்கான் ... கஜி யார் மனசும் நோகாம நடக்கும் அன்பு தம்பி .... நல்லா மரியாதை தெரிஞ்ச பையன் ... பார்த்திங்களா சுரேஷ் - ஐ பத்தி பேசும் பொது எத்தன பேர பத்தி சொல்ல வேண்டிருக்கு ... நான் சொன்னது 10 சதவிகிதம் தான் .... ரொம்ப சந்தோஷமான விஷயம் சுரேஷ் இப்போது குடும்பஸ்தன் ... எஸ் மிர்ஸ் . ஷ்ய்லஜா சுரேஷ் .... இருவரது காதலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் இனிதே நடந்து முடிந்தது ...
ஷ்ய்லஜா நல்லா பெண் , எங்களது நண்பனுக்கு ஏற்ற பெண் ... சுரேஷ்-ஐ பற்றி தனிபட்டவனாக சொல்ல வேண்டுமானால் ... எனக்கு ஒரு நல்ல வாழ்கையை அமைத்து கொடுத்தவன் ... எல்லோருக்கும் அவர்கள் அப்பாதான் ரோல் மாடல் என்பார்கள் ... ஆனால் எனக்கு எனது நண்பன் சுரேஷ் தான் ரோல் மாடல் ...
அலட்டிக்கமாட்டன் , உண்மையா இருப்பான் , எல்லோருக்கும் அவன பிடிக்கும் ... யோசிச்சு பண்ணுவான் ... முடியுரத மட்டும் தான் சொல்லுவான் ... ரொம்ப ஜாலி டைப் ... நான் இப்போ ஒரு நல்ல ஒரு நிலைமைல இருக்கேன்னா சுரேஷ் காரணம்னு சொல்ல முடியாது ... சுரேஷ் மட்டும்தான் காரணம் ... இவ்ளோ பெருமைக்குரிய எங்களது நண்பன் சுரேஷ் -இன் திருமண வாழ்கையும் சிறப்பாக அமையணும்னு கடவுளை வேண்டுகிறேன்


சுரேஷ்,
பெற்றோர்களுக்கு நற் பிள்ளையாய்,
உறவினர்களுக்கு உற்ற உறவாய்,
சகோதரர்களுக்கு நற் சான்றாய்,
அண்ணிகளிடத்தில் அன்பாய்,
நட்புக்கு ஒரு எடுத்துகாட்டாய்,
கர்வம் இல்லாதவனாய், கற்றதை பிறர்க்கு கற்பிக்கும் மனம் உடையவனாய்,
கிடைத்தது போதும் என்று இல்லாமல் தினம் தினம் எதையோ தேடுபவனாய்,
ஒரு செயல் செய்தால் அதை யாரும் செய்திருக்க முடியாத அளவில் செய்யும்
முற்போக்கு சிந்தனயலனாய், விளங்கும் எங்களது நண்பன் சுரேஷ் கண்டது எல்லாம்
வெற்றிதான் ... இப்போது காதலிலும் வெற்றி பெற்று திருமண பந்தத்தில் காலெடுத்து வைக்கிறான்...
இத்திருமண பந்தத்தில் இவனுடன் கை கோர்ந்து நிக்கும் சகோதரி ஷ்ய்லஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

உங்களது திருமண வாழ்க்கை இனிதாகவும், சிறப்பாகவும் அமைய வாழ்த்துகிறேன்

Sunday, April 12, 2009

This is my first blog

Hi Friends,
I had started bloggin today